கட்சிக் கொடிகளை கட்டிய பள்ளி மாணவர்கள்..அலட்சியமாக பதில் அளித்த தலைமை ஆசிரியர்..!
கிருஷ்ணகிரி பள்ளி மாணவர்கள் கட்சி கொடி கட்டும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தை முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
2.36 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 10 வகுப்பறை கட்டிடம் திறக்கப்பட்டதையடுத்து பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் பள்ளிக்கு வருகை தந்தார். இதனை முன்னிட்டு பள்ளி மாணவிகள் ஏணியை தாங்கி பிடித்தபடி திமுக கொடி கட்டியது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இது குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களையும் பள்ளி தலைமை ஆசிரியர் விஜய லட்சுமி தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது. முடிவாக பள்ளி கல்வித்துறை மற்றும் தமிழக அரசு இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





