--- --:--:-- --

விண்வெளி சுனிதா வில்லியம்ஸின் தற்பொழுது நிலை என்ன..?

5

விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ள நாசா அவர் நல்ல உடல் நலத்துடன் உள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.

 

ஆய்வுக்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகிய இருவரும் கடந்த ஜூன் 5ஆம் தேதி சென்றனர். ஆனால் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் பல மாதங்களாக அங்கு உள்ளனர்.

 

சுனிதாவின் உடல் எடை குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதனை மறுத்து நாசா சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள அனைத்து விண்வெளி வீரர்களில் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon