--- --:--:-- --

அரசு பள்ளி சமையல் சிலிண்டரில் பற்றிய தீ..அலறி அடித்து ஓடிய பெண்கள்..!

6

திருத்தணியில் உள்ள அரசு பள்ளியில் சிலிண்டர் தீ பற்றியதில் நல்வாய்ப்பாக 3 பேர் உயிர் தப்பினர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே காவிரி ராஜபுரம் பேரூராட்சியில் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது.

 

இதில் 38 மாணவ மாணவிகள் பயின்று வரும் நிலையில் காலை உணவு சமைக்கப்பட்ட பொழுது எதிர்பாராத விதமாக சிலிண்டர் பற்றியது. இதனை பார்த்து அங்கிருந்து மூன்று பெண்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

 

அந்த பகுதியினர் ஒன்று சேர்ந்து சிலிண்டரில் பற்றி தீயை அணைத்தனர். சமையல் கூடத்தை முறையாக பராமரிக்காததால் இதுபோன்ற சம்பவம் நடப்பதாக அங்கிருந்தவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon