நெடுஞ்சாலை நடுவே திடீரென உருவான பள்ளம்..!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மாநில நெடுஞ்சாலை நடுவே திடீரென பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். தேவகோட்டை செல்லும் மாநில நெடுஞ்சாலை திடீர் என சுமார் 6 அடியில் பள்ளம் ஏற்பட்டது.
இதனை எதிர்பாராத வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து வந்த காரைக்குடி மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வாகனங்களை மாற்று பாதையில் திருப்பி விட்டனர்.
காரைக்குடியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சாலைகளில் ஆங்காங்கே இது போன்ற பள்ளங்கள் ஏற்படுவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





