--- --:--:-- --

செய்தியாளர்களை தாக்கிய முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்கள்..!

4

தஞ்சையில் அதிமுக முதலமைச்சர் வைத்திலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் 15 மணி நேரத்திற்கு மேலாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.

 

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் வைத்திலிங்கத்தின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

 

காலை 7:30 மணியளவில் தொடங்கிய சோதனை இரவு 10:30 மணியளவில் நிறைவடைந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைத்திலிங்கம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்ட கேள்விக்கு முறையாக பதில் அளித்துள்ளதாகவும் அவர்கள் எந்த ஆவணங்களையும் எடுத்துச் செல்லவில்லை எனவும் தெரிவித்தார்.

 

இதற்கிடையே அமலாக்கத்துறை சோதனை குறித்து செய்தி வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து செய்தியாளர்கள் தஞ்சை பட்டுக்கோட்டை சாலைகளில் மறியலில் ஈடுபட முயன்றனர்.

 

அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர் தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon