கட்டுப்பாட்டை இழந்து பைக் மீது கார் மோதி விபத்து..!
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மாணிக்கம் என்பவர் நாகப்பட்டியில் உள்ள மகள் வீட்டிற்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் தேவஸ்தானத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது குளித்தலை அருகே எதிரே சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் மாணிக்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





