வழுவழுப்பான சாலையில் கவிழ்ந்த அரசு பேருந்து..!
பாலக்காடு அருகே வழுவழுப்பான சாலையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். ஓசூரில் இருந்து தர்மபுரி நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள தர்மபுரி, ஓசூர் நெடுஞ்சாலையில் கோடியூர் அருகே பேருந்து சென்ற பொழுது முன்னே சென்று கொண்டிருந்த பேருந்து மீது மோதாமல் இருக்க ஓட்டுனர் திடீரென பிரேக் போட்டுள்ளார்.
கனமழை காரணமாக சாலை வலுவலுப்பாக இருந்ததால் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்தில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மூன்று 108 ஆம்புலன்ஸ் மூலம் பாலக்கோடு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சிலர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து காரணமாக ஓசூர் பாலக்கோடு சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






