--- --:--:-- --

ஆய்வுக்கு சென்ற இடத்தில் நடந்த அதிர்ச்சி..மருத்துவரை கடிந்து கொண்ட அமைச்சர்..!

5

ஓமலூர் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆய்வுக்கு சென்ற பொழுது நாய் கடித்த நோயாளிக்கு அவரது பேரன் முதலுதவி செய்ய செய்து கொண்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனை கண்டு அமைச்சர் செவிலியர் மற்றும் மருத்துவர் கடிந்து கொண்டார்.

 

சேலம் மாவட்டம் ஓமலூர் அரசு மருத்துவமனையில் ரத்த வங்கி அறுவை சிகிச்சை அரங்கம் அனைத்து வசதிகளும் உள்ளன. தேசிய தரச் சான்று தருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தேசிய தரச் சான்று ஆய்வு குழுவினர் அந்த மருத்துவமனையில் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

 

இந்த நிலையில் அந்த மருத்துவமனையில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது நாய் கடிக்காக அனுமதிக்கப்பட்ட முதியவருக்கு அவரது பேரன் முதலுதவி அளித்து கொண்டிருந்தான். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் செவிலியர் மற்றும் மருத்துவரை கடிந்து கொண்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon