--- --:--:-- --

சென்னையில் இன்று விமானப்படை சாகச நிகழ்ச்சி..!

1

சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சியையொட்டி, வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்திய விமானப்படை நாள் முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் இன்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

 

இதற்காக சுமார் 15 லட்சம் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர்கள் வாகனங்கள் பார்க்கிங் செய்வதற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

 

அதன்படி, கடற்கரையை ஒட்டியுள்ள காமராஜர் சாலை விவிஐபி மற்றும் விஐபிகளுக்கான கார் பார்க்கிங்காக இருக்கும் எனவும், மாநிலக் கல்லூரி வளாகம், சுவாமி சிவானந்த சாலை, லேடி வெலிங்டன் கல்லூரி ஆகிய இடங்களில் நீல வண்ண பாஸ் உள்ள வாகனங்களை நிறுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னை மெரினாவில் சாகசத்தில் ஈடுபடும் விமானக் குழுக்களுக்கு சோழா, பாண்டியா, பல்லவா என பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. 72 வகையான விமானங்கள் சாகச நிகழ்ச்சியில் ஈடுபட உள்ளன. காலை 11 மணி அளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்து விமான சாகசத்தை பார்வையிடுகிறார்.

Right Menu Icon