--- --:--:-- --

நீலகிரி: மசினகுடி அருகில் வாழைத் தோட்டம்.. கிராமத்தில் குரங்குகள் அட்டகாசம்

4

நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகில் வாழைத் தோட்டம் கிராமத்தில் குரங்குகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. அப்பகுதியில் உள்ள வீடுகளில் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கும் குரங்கு கூட்டம் வீட்டில் உள்ள அரிசி பருப்பு கோதுமை உள்ளிட்ட உணவு பண்டங்கள் அனைத்தையும் நாசப்படுத்தி பாத்திரங்களை சேதப்படுத்தி விடுகிறது.

 

மற்ற பகுதிகளில் அட்டகாசம் செய்யும் குரங்குகள் பிடித்து அதை காட்டிற்குள் விடாமல் மக்கள் அதிக அளவில் உள்ள வாழைத்தோட்டம் பகுதியில் விட்டுவிட்டு செல்கின்றனர் வனத்துறையினர்.

 

வாழைத்தோட்டம் பகுதியில் சுற்றித் திரியும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வனத்துத் துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Right Menu Icon