சென்னையில் இரவில் பரவலாக பெய்த மழை..!
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவில் பரவலாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. கடந்த சில நாட்களாக, சென்னை உட்பட அதன் புறநகர் பகுதிகளில் மே மற்றும் ஏப்ரல் மாதம் போல் கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில், இரவில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி கோயம்பேடு, நெற்குன்றம், மதுரவாயல், வானகரம், ஆழ்வார்திருநகர், ஆலப்பாக்கம், வளசரவாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
கடந்த சில நாட்களாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் இரவில் மின்வெட்டு ஏற்பட்டு வந்ததால், மக்கள் புழுக்கத்தில் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் திடீரென பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





