டெல்லியில் இன்று முதலமைச்சராக பதவியேற்கிறார் அதிஷி..!
டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி இன்று மாலை பதவியேற்க இருக்கிறார். டெல்லி முதலமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை வழக்கில் அண்மையில் உச்சநீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமின் பெற்றார்.
ஆனால் துணை நிலை ஆளுநர் ஒப்புதல் இன்றி கோப்புகளில் கையெழுத்திடக்கூடாது என்பது உள்ளிட்ட உச்சநீதிமன்றத்தின் நிபந்தனைகளால் அர்விந்த் கெஜ்ரிவால் பதவி விலகினார்.
இதையடுத்து அவருக்கு பதில் முதலமைச்சராக அதிஷி பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டார். இதையடுத்து டெல்லி துணைநிலை ஆளுநரிடம் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கிய அதே நாளில் அதிஷி ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தார்.
இந்த நிலையில் டெல்லி துணைநிலை ஆளுநர் மாளிகையில் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெற இருக்கும் பதவியேற்பு விழாவில் முதலமைச்சராக அதிஷியும், அவருடன் 5 அமைச்சர்களும் பதவியேற்க இருக்கின்றனர். இதன்மூலம் டெல்லியின் மிக இளம் வயது முதலமைச்சர் என்ற பெருமையை 43 வயதாகும் அதிஷி பெறவுள்ளார்.
மேலும் சுஷ்மா ஸ்வராஜ், ஷீலா தீக்ஷித் ஆகியோருக்கு அடுத்ததாக முதலமைச்சராக பதவியேற்கும் மூன்றாவது பெண் முதலமைச்சர் என்ற பெருமையையும் அதிஷி பெறுகிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




