பஞ்சாமிர்தத்தில் மாட்டுக் கொழுப்பு இல்லை : அரசு
பழனி பஞ்சாமிர்தத்தில் மாட்டுக்கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்படுவதாக வெளியான தகவலை தமிழக அரசு மறுத்துள்ளது. இதுபோன்ற தகவல்களை பக்தர்கள், பொதுமக்கள் நம்ப வேண்டாம்.
பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய் ஆவின் நிறுவனத்திடம் இருந்தே பெறப்படுகிறது. திருப்பதி லட்டு சர்ச்சையில் சிக்கிய A.R. Dairy Food நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்படவில்லை என விளக்கமளித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




