--- --:--:-- --

INSTAGRAM-ல் TRADING விளம்பரம்..பண மோசடி..!

10

திருப்பூர் மாநகர சைபர்கிரைம் காவல்நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி சுப்பிரமணி (பெயர்மாற்றப்பட்டுள்ளது) என்பவர் INSTAGRAM-ல் TRADING சம்பந்தமான விளம்பரம் ஒன்று பார்த்ததாகவும் பிறகு F77 GROW CAPITAL என்ற WHATSAPP GROUPல் இணைக்கப்பட்டதாகவும் தனக்கு லிங்குகளை அனுப்பி LOGIN செய்ய சொன்னதாகவும் அதன்பிறகு அதில் தன்னை ACCOUNT உருவாக்க சொல்லி அதில் பரிந்துரைக்கப்பட்ட TRADINGல் பல தவணைகளில் ரூ.77,59,545 பணத்தை முதலீடு செய்து ஏமாற்றப்பட்டதாகவும் புகார் அளித்தார்.

 

புகாரின் பேரில் சைபர் கிரைமில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. வழக்கில் உதவி ஆய்வாளர் சையது ரபிக் சிக்கந்தர் மற்றும் சுபா, காவலர் பிரான்கின் செல்வராஜ், நவீன் கிருஷ்ணன், கருணாசாகர் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சென்னை சேப்பாக்கத்தில், குற்றவாளிகளான அர்ஸாத், ஷேக்முகமது, தௌஃபிக் @ ஜான்குளோரி @ ஜாக், அப்துல் முனாஸ் ஆகிய 4 பேரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனர்.

 

குற்றவாளிகள் பொது மக்களிடம் வங்கி கணக்கை உருவாக்கி அதனை பெற்று குற்ற செயலுக்கு பயன்படுத்தியுள்ளனர். வங்கி கணக்கை உருவாக்கி கொடுத்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 

எனவே பொதுமக்கள் வங்கி கணக்குகளை போலியாக உருவாக்கி தருமாறு தங்களிடம் யாராவது கேட்டால் சைபர் கிரைம் உதவி எண் 1930 புகார் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது மேலும் TELEGRAM மற்றும் WHATSAPP மூலம் டாஸ்க் முறையிலும் மற்றும் சேர்மார்கெட்டிலும் முதலீடு செய்து குறுகிய காலத்தில் அதிக லாபம்
சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி வரும் எவ்வித குறுஞ்செய்திகளையோ தொலைபேசிகளையோ நம்பி அதில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என திருப்பூர் மாநகர சைபர் கிரைம் காவல் நிலையம் பொதுமக்களை விழிப்புடன் இருக்கும்படி கேட்டுக்கொள்கிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon