ஹரியானா தேர்தலில் வாக்குறுதிகளை அள்ளி வீசிய பாஜக..!
ஹரியானாவில் பெண்களுக்கு மாதம் தோறும் ரூ.2,100 உதவி தொகை வழங்கப்படும் என பாஜக தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ளது. காங்கிரஸ் 2000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் வாக்காளர்களை கவரும் வகையிலான பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் 500 ரூபாய்க்கு சமையல் சிலிண்டர் வழங்கப்படும் என்றும் கிராமப்புறங்களில் இருந்து கல்லூரிகளுக்கு செல்லும் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று ஹரியானாவில் இருந்து வேறு மாநிலங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு 100% உதவித்தொகை வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
ஓபிசி பிரிவை சேர்ந்த தொழில் முனைவோருக்கும் 25 லட்சம் ரூபாய் வரை கடன் உத்தரவாதம் 5 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 10 தொழில் நகரங்கள் என்பன உள்ளிட்ட 20 வாக்குறுதிகளை பாஜக அறிவித்துள்ளது. ஹரியானா மாநிலத்தில் 5ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





