கன்னட அரசின் முடிவால் பாதிக்கப்படும் இந்திய மாணவர்கள்..!
வெளிநாட்டு மாணவர்களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு அனுமதி கட்டுப்பாடுகளை விதிக்க கன்னட அரசு முடிவு செய்துள்ளது. இந்திய இளைஞர்கள் அதிக அளவில் கனடாவில் படித்தும் பணியாற்றியும் வரும் நிலையில் ஜஸ்டின் ரூடோ அரசின் இந்த அறிவிப்பு இந்தியர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் அகதிகள் குடியேற்றம் கன்னட அரசியலில் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இடைத்தேர்தல் தோல்வியையடுத்து கன்னட பிரதமர் ஜஸ்டின் ரூடோ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





