பாஸ்போர்ட் இணையதள சேவை 2 நாட்கள் நிறுத்தம்..!
பாஸ்போர்ட் இணையதள சேவை இரண்டு நாட்கள் நிறுத்தப்படுகிறது. பாஸ்போர்ட் சேவை திட்ட இணையதள முகவரி மூலம் அளிக்கப்பட்டிருக்கிறது. இதில் இன்று இரவு 8 மணி முதல் வரும் 23ஆம் தேதி காலை 6 மணி வரை தொழில்நுட்ப பராமரிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
இதன் காரணமாக பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கு இந்த காலகட்டத்தில் எந்த சேவையும் கிடைக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் முன் அனுமதி மற்றும் விளக்கங்களுக்கு திட்டமிடப்பட்டு பராமரிப்புக்கு பிறகு இணையதள முகவரியை பார்வையிடுமாறு சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





