தலைக்கேறிய கஞ்சா போதையால் சாலையில் நிர்வாணமாக சுற்றிய இளைஞரால் பரபரப்பு..!
மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையத்தில் கஞ்சா போதையில் நிர்வாணமாக வந்து பயணிகளை அச்சுறுத்தி சுற்றித்திரிந்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அங்கிருந்து கட்டுமான தொழிலாளர்களிடம் பொது மக்களும் இளைஞர்களை பிடிக்க முயன்ற பொழுது கஞ்சா போதையில் கற்களாலும் பிளாஸ்டிக் கற்களாலும் தாக்கியதில் இருவர் லேசான காயமடைந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் இளைஞர்களுக்கு ஆடை அணிவித்த பொழுது அதனை கழற்ற முயன்றதால் அங்கிருந்த அவர்கள் அவரை கட்டிவைத்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





