7வது ஊதியக்குழுவில் உள்ள முரண்பாடுகளை களைந்து ஒரு நபர் குழு மூலம் விரைவில் அமல்படுத்திட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – தமிழ்நாடு பட்டய பொறியாளர்கள் சங்கம் வலியுறுத்தல் !!!
7வது ஊதியக்குழுவில் உள்ள முரண்பாடுகளை களைந்து ஒரு நபர் குழு மூலம் விரைவில் அமல்படுத்திட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பட்டய பொறியாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.தமிழ்நாடு பட்டய பொறியாளர் சங்கத்தின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கோவை காந்திபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் நடைபெற்றது.

இச்சங்கத்தின் மாநிலத் தலைவர் விஜய முருகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் ஜோதி நிர்மலாசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மகளிர் தொழிற்பயிற்சி நிலையங்களில் தற்காலிகமாக இருக்கும் தொழில் நுட்ப பதவிகளை நிரந்தர பதவிகளாக மாற்றுவது,அரசினர் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் சிறப்பு அதிகாரி என்ற பதவியை முதல்வர் பதவியில் ஆக மாற்றி அமைத்திடுவது, வருடந்தோறும் அனைத்து தொழிற் பிரிவுகளுக்கும் ஜூலை 1-ஆம் தேதியன்று பதவி உயர்வுக்கான பட்டியலை வெளியிட்டு நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பட்டய பொறியாளர்கள் சங்கத்தின் கோரிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு அரசு அலுவலர்கள் கழகத்தின் மாநில தலைவர் சௌந்திரராஜன் சித்திக் தலைமையிலான ஒரு நபர் குழு ஏழாவது ஊதியக் குழுவில் உள்ள முரண்பாடுகளை களைந்து பட்டய பொறியாளர்களின் கோரிக்கையை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




