கேள்விக்கு பதில் அளிக்காத ஆத்திரத்தில் மாணவியை அடித்த ஆசிரியர்..!
ஓசூரில் ஆசிரியை அடித்ததால் எலும்பு முறிவு ஏற்பட்ட மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் புதுப்பட்டி கிராமத்தில் ஆனந்த லக்ஷ்மி தம்பதியினரின் மகன் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார்.
அவர் பிளஸ் டூ இவரது ஆங்கில ஆசிரியர் பாடம் சம்பந்தமாக கேட்ட கேள்விக்கு உரிய பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆசிரியை மாணவியை பிரம்பால் கடுமையாக அடித்ததில் மாணவியின் கை மற்றும் கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து அதே பள்ளியில் ஆசிரியை பணியாற்றி வரும் மேனகா என்ற ஆசிரியை மாணவியின் தாயாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
உடனே மாணவியை அவரின் தாயார் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற பொழுது மாணவிக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்த தகவல் அறிந்து மருத்துவமனைக்கு சென்ற காவலர்கள் வழக்கு பதிவு செய்து ஆசிரியையிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





