பெண்கள் பொது வெளியில் பாடத்தடை..!
ஆப்கானிஸ்தானில் பெண்கள் பொது வெளியில் பாட தாலிபான்கள் தடை விதித்துள்ளனர். ஆப்கான் ஆட்சி செய்து வரும் தாலிபன்கள் அடிக்கடி கட்டுப்பாடுகள் விதித்து அங்குள்ள மக்களை சிரமப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பெண்கள் பொது இடங்களில் சத்தமாக பேசவும் பாடவும் தடை விதித்து புதிய சட்டம் ஒன்றை தாலிபன் அரசு ஏற்றியுள்ளது. மேலும் பெண்கள் தனியாகவோ உறவு முறை இல்லாத ஆண்களோடு பயணிக்க கூடாது என கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்த புதிய சட்டத்திற்கு ஐநா சபை அதிருப்தி தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





