பள்ளிக்குள் அரங்கேறிய பயங்கரம்..பதறிய மாணாக்கர்..!
அரியலூர் மாவட்டம் தேலூரில் அரசு உயர்நிலை பள்ளி கணினி ஆய்வகத்தில் கணினி வெடித்து ஏற்பட்ட விபத்தில் மாணவ மாணவிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.
கணினி ஆய்வகத்திலிருந்து வெளியேறிய கரும்புகை பக்கத்தில் இருந்த வகுப்பறைகளுக்கு பரவியதாக கூறப்படும் நிலையில் பாதிக்கப்பட்ட சுமார் 19 மாணவ மாணவிகள் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





