இளநிலை மருத்துவ படிப்பு அகில இந்திய கலந்தாய்வு இன்று தொடங்குகிறது..!
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. இந்தியாவில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறுகிறது.
இந்த ஆண்டு நீட் தேர்வில் ஏற்பட்ட முறைகேடு காரணமாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளினால் மருத்துவ படிப்பு கலந்தாய்வு துவங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.
அகில இந்திய ஒதுக்கீட்டில் பல்கலைக்கழகங்கள் மத்திய அரசின் மருத்துவ கல்வி நிலையங்கள் மற்றும் மாநில அரசின் மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான 15 சதவீதம் இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது.
அதன்படி சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் 27,000 வீடியோ சீடர்களுக்கு மூன்று கட்டங்களாக கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





