வயநாடு நிலச்சரிவு..குகேஷ் ரூ.10 லட்சம் நிதியுதவி..!
வயநாடு நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
இதில் மீட்புப் பணிகளுக்காக பலரும் நிதியுதவி வழங்கிவரும் நிலையில், தமிழக இளம் செஸ் வீரர் குகேஷ் ₹10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். இதற்கான காசோலையை கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ளார். அவரது உதவும் குணத்திற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




