உறை கிணற்றில் இறங்கிய 3 பேர் விஷ வாயு தாக்கி பலி..!
தூத்துக்குடியில் உறை கிணற்றில் இறங்கிய மூன்று பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவர் வீட்டில் உள்ள உறை கிணற்றை சுத்தம் செய்வதற்காக கணேசன் பாலசுப்ரமணியன் ஆகிய இருவரும் இறங்கினார்.
அவர்கள் வெகு நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த உறவினர் ஒருவர் வேகமாக கிணற்றில் இறங்கியுள்ளார். கணேசன் பாலசுப்பிரமணியன் இருவரும் உள்ளே மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இருவரையும் காப்பாற்ற முயன்றுள்ளார். அப்பொழுது அவர் மூச்சுதிணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் மூன்று பேரின் உடல்களையும் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.






