அரசுப் பேருந்தை தாறுமாறாக ஓட்டிய ஓட்டுநர்..!
சென்னையில் மாநகரப் பேருந்தை ஓட்டுநர் தாறுமாறாக ஓட்டியதால் பயணிகள் அச்சம் அடைந்தனர். இது தொடர்பாக பயணிகள் கேள்வி எழுப்பியதால் ஓட்டுனர் பேருந்தை சாலையில் நிறுத்தி பயணிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும் பயணிகளை அநாகரிகமாக பேசிய ஓட்டுனர் இந்த வேலை இல்லை என்றால் வேறு வேலை. தன்னை எதுவும் செய்ய முடியாது என்று சவால் விட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில் ஓட்டுநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.





