தாயின் தூக்க மாத்திரையை உட்கொண்ட குழந்தை மரணம்..!
சென்னை தாம்பரத்தில் தாயின் தூக்க மாத்திரையை தெரியாமல் உட்கொண்ட நான்கு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலையூர் சந்தோஷ் புரத்தில் அஸ்வினி என்பவரின் மூத்த மகள் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த ஜனவரி மாதம் இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த அவர் மருத்துவர் பரிந்துரையின் படி தூக்க மாத்திரைகளை எடுத்துக் கொண்டுள்ளார்.
நேற்று இரவு தூக்க மாத்திரை தூங்குவதற்கு முன்பு மாத்திரைகளை படுக்கையின் அருகில் வைத்து விட்டு கழிவறைக்கு சென்றதாகவும் அப்பொழுது அவரது நான்கு வயது மகள் யாத்ரா மாத்திரைகளை தவறுதலாக எடுத்து உட்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இது தெரியாமல் தனது குழந்தையுடன் உறங்க சென்ற நிலையில் அதிகாலை நேரத்தில் குழந்தை வாயில் நுரை தள்ளி உயிரிழந்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியில் உறைந்து போனால் அஸ்வினி குஜராத்தில் பணிபுரியும் கணவரிடம் தெரிவித்துவிட்டு தனது கையை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அஸ்வினியின் தாயார் சுதாகர் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.





