--- --:--:-- --

பவானி ஆற்றில் குளிக்க தடை..!

6

வானி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பக்தர்கள் யாரும் ஆற்றில் இறங்கி நீராட முயற்சிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.

 

இதனால் ஆடிப்பெருக்கான இன்று மற்றும் ஆடி அமாவாசையான நாளை ஆற்றில் குளித்துவிட்டு பவானி கரையில் வழிபாடு நடத்தும் பக்தர்கள் யாரும் இந்த முறை இறங்கி குளிக்க முயற்சிக்க கூடாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

 

மேலும் ஆறுகள் மற்றும் நீர்நிலைகளின் அறிக்கை செல்ல வேண்டாம் என்று பொது மக்களை மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. பவானி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் புனித நீராட அனுமதி மறுக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. படித்துறைகள் மற்றும் நாற்றங்கரையில் உள்ள ஒரு நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

 

Right Menu Icon