கொள்ளிடத்தில் உயர் மின்னழுத்த கோபுரம் சாய்ந்தது..!
கொள்ளிடம் மலையிலிருந்து ஒரு லட்சத்துக்கும் அதிகமான கன அடி நீர் திறந்து விடப்படுவதால் கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் வெளியேற்றும் அதிகரித்துள்ளது.
பாலத்தின் மண்ணரிப்பு ஏற்பட்டதன் காரணமாக அதன் அருகாமையில் இருந்த உயர் மின்னழுத்த கோபுரத்தின் கான்கிரீட் தூண்கள் சாய்ந்துவிழும் நிலையில் இருந்ததால் மின்வாரிய ஊழியர்கள் கிரேன் உதவியுடன் கோபுரத்தை வலுப்படுத்தும் பணியை செய்தனர்.
ஆனால் தண்ணீரின் வேகம் தாங்காமல் நள்ளிரவில் உயர் மின்னழுத்த கோபுரம் பலத்த சத்தத்துடன் தண்ணீரில் விழுந்தது. பாலத்தில் முற்றிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டு பணிகள் மேற்கொண்டதன் காரணமாக எவ்வித சம்பவிதங்களும் நடைபெறவில்லை.






