இன்று மட்டும் தனியார் வாகனங்களுக்கு அனுமதி..!
பிரசித்தி பெற்ற காரையாறு சொரிமுத்துக்கோயில் ஆகஸ்ட் 4ஆம் தேதி நடைபெற உள்ள ஆடி அமாவாசை திருவிழா நடைபெற உள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் வனத்துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இன்று ஒரு நாள் மட்டும் தனியார் வாகனங்களில் செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் ஆகஸ்ட் 5 வரை கோயிலுக்கு செல்ல பொது போக்குவரத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






