--- --:--:-- --

நன்றாக பழகி குழந்தையை கடத்திய பெண்..!

5.1

வேலூர் அரசு மருத்துவமனையில் இருந்து பச்சிளம் குழந்தை கடத்தப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பழங்குடியின பெண்ணை தரையில் அமர வைத்து விசாரித்தது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே கடத்தப்பட்ட குழந்தை மீட்கப்பட்டு நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சின்னு என்ற பழங்குடியின பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்திருந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் நன்றாக படிக்க குழந்தையை கடத்தி சென்றுள்ளார்.

 

தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள புற காவல் நிலையத்தில் வைத்து சின்னுவிடவும், அவரது கணவர் கோவிந்தனிடமும் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது சின்னுவிடம் அவரது கணவரும் தரையில் அமர வைத்து விசாரிக்கப்பட்டது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

 

இது குறித்து ஆய்வாளர் சுதாகர் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்ட பொழுது நாற்காலிகையில் அமர வைத்ததாகவும் உடல் ஒத்துழைக்காததால் தரையிலேயே அமர்ந்து கொள்வதாக சின்னு கூறியதாக விருப்பத்தின் பேரிலேயே தரையில் அமர்வதாகாவும் தெரிவித்தார்.

 

இதனிடையே குழந்தையை கடத்திய வைஜெயந்தி மாலா என்பவரும் கர்நாடகாவைச் சேர்ந்த மூன்று பேரும் கைது செய்யப்பட்டு குழந்தை மீட்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon