--- --:--:-- --

மளிகை கடையில் 100 கிலோ போதை பொருள் பறிமுதல்..!

5

பூந்தமல்லி அருகே சட்டவிரோதமாக குட்கா விற்பனையில் ஈடுபட்ட மளிகை கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். சென்னை அடுத்த பூந்தமல்லியில் உள்ள மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

 

அதன் பிறகு சம்பந்தப்பட்ட கடையில் சோதனை நடத்திய போலீசார் 100 கிலோ புகையிலை மற்றும் போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் கடை உரிமையாளர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon