நெல் அறுவடை இயந்திரத்தில் சிக்கி ஓட்டுனரின் கை துண்டானது..!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நெல் அறுவடை இயந்திரத்தில் சிக்கி ஓட்டுனரின் வலது கை துண்டானது.
நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் குன்னத்தூர் கிராமத்தில் தனது நெல் அறுவடை இயந்திரத்தின் மூலம் வைகோலை கட்டு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது அதற்குள் மாட்டிக்கொண்ட வைக்கோலை எடுக்க முயற்சித்த பொழுது விபத்து ஏற்பட்டுள்ளது.
ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நாகராஜ் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





