--- --:--:-- --

ஆபாச மெசேஜ்..பெண்ணின் உறவினர்கள் தாக்குதல்..அவமானத்தால் தற்கொலை..!

9

தேனி மாவட்டம் போடி அருகே ஜெராக்ஸ் கடை உரிமையாளர் ஒருவரின் தற்கொலை வழக்கில் அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள சின்னமனுர் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமண ராஜா.

 

மனைவி மற்றும் மூன்று வயது மகளுடன் வசித்து வந்த இவர் அதே பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். லட்சுமண ராஜா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

 

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் லட்சுமண ராஜாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்த முயன்ற நிலையில் உடலை ஒப்படைக்கும் உறவினர்கள் மறுப்பு தெரிவித்தனர். தொடர் ராஜாவின் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி போடி தேவாரம் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

தொடர்ந்து 10 மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் தொடர்ந்தால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சாலை ஸ்தம்பித்து போனது. விசாரணையில் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் லட்சுமி ராஜாவின் கடையில் ஜெராக்ஸ் எடுக்க வந்த பொழுது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாகவும் இதில் அந்த பெண்ணின் செல்போனுக்கு லக்ஷ்மணராஜா சில ஆபாச செய்திகளை அனுப்பியதாகவும் சொல்லப்படுகிறது.

 

இதை அறிந்த பெண்ணின் உறவினர்கள் லக்ஷ்மண ராஜாவை கடைக்குள் புகுந்து தாக்கியதாகவும் தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்து லட்சுமணராஜா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில் பெண்ணின் உறவினர்கள் ஏழு பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon