--- --:--:-- --

நடு ரோட்டில் பழுதாகி நின்ற பேருந்து.. ஓரம் கட்டிய மாணவர்கள்..!

5

மதுரை பெரியார் பேருந்து நிலையம் நோக்கி சென்ற மாநகர பேருந்து திடீரென பழுது ஏற்பட்டு சாலை நடுவே நின்றது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 

இதனை தொடர்ந்து பேருந்து பயணிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் பேருந்தை சாலை ஓரத்திற்கு தள்ளி கொண்டு சென்று நிறுத்தினர். பின்னர் பேருந்தில் பயணித்து அந்த பள்ளி மாணவர்கள் மற்றும் பயணிகள் மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

மாநகர பேருந்துகள் பெரும்பாலானவை பழுதாகி இருப்பதால் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon