--- --:--:-- --

மருமகள் கள்ளக்காதல்..மாமியார் கொலை..!

6

தனது தவறான நடத்தையை கணவரிடம் கூறி விடுவார் என்ற அச்சத்தில் மாமியாரை கொலை செய்த மருமகளையும் அவரது காதலியையும் போலீசார் கைது செய்தனர். மதுரை அடுத்த திருமங்கலம் அருகே வாகை குளத்தில் கடந்த வாரம் மூதாட்டி காசம்மாள் என்பவர் கொலை செய்யப்பட்டு 65 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.

 

இந்த சம்பவம் குறித்து அவரது மருமகள் சுதாவிடம் போலீசார் விசாரணை நடத்திய பொழுது எனது கணவர் வெளிமாநிலத்தில் பணியாற்றி வரும் நிலையில் கேபிள் ஆபரேட்டர் பாக்யராஜுடன் பழகியதாகவும் அதை மாமியார் பார்த்து விட்டதால் பாக்யராஜ் மூலம் கொலை செய்துவிட்டு நகைக்காக நடந்த கொலை என நாடகமாட கூறியதாக தெரிகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon