வாலுடன் பிறந்த அதிசய குழந்தை..!
ஹைதராபாத்தில் வாலுடன் பிறந்த அதிசய குழந்தை பிறந்தது. வாலை மருத்துவர்கள் அகற்றி உள்ளனர். ஹைதராபாத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அழகான ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தையின் பின் பகுதியில் வால் இருந்துள்ளது. குழந்தை பிறந்த 3 மாதங்களில் 15 சென்டிமீட்டர் அளவுக்கு வால் வளர்ந்தது. இதனால் குழந்தையின் பெற்றோர் வேதனை அடைந்தனர். இதனையடுத்து ஹைதராபாத்தில் குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது.
அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர் குழந்தையை பரிசோதித்தார். அப்பொழுது வால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





