புரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை இன்று திறப்பு..!
ஒடிசா மாநிலம் புரியில் உள்ள ஜெகந்நாதர் கோயில் உலக புகழ்பெற்றதாகும். அக்கோயிலின் பொக்கிஷ அறை சாவி தொடர்பாக தேர்தலில் அப்போதைய முதல்வர் நவீன் பட்நாயக், வி.கே. பாண்டியனை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வென்று ஆட்சியமைத்த பிறகு, அதை திறந்து அங்குள்ளவற்றை கணக்கிட ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து 46 ஆண்டுகளுக்கு பிறகு இன்று திறக்கப்படுகிறது.
📱 Share on WhatsApp
𝕏 Share on X





