--- --:--:-- --

குடிக்க குடிநீர் கூட இல்லாமல் கல்லூரி மாணவர்கள் அவதி..!

4

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே அரசு கலைக்கல்லூரியில் மாணவ மாணவியர் குடிக்க குடிநீர் கூட இல்லாத நிலை இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

தென்னாங்குடியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் படித்து வரும் எட்டு பாடப்பிரிவுகளில் 1,450 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இத்தனை மாணவர்களுக்கும் ஐந்து குடங்களில் மட்டும் தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது. கல்லூரி தொடங்கி ஒரு மாதத்திற்கு பிறகு கூட இங்கு குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை என்கிறார்கள்.

 

மாணாக்கர்களின் பெற்றோர் மாணவ மாணவியர் கல்லூரிகளில் இருந்து சாலையை கடந்து எதிரே உள்ள பள்ளி கடைகளில் தண்ணீரை காசு கொடுத்து வாங்கி குடிக்கும் நிலையே உள்ளது. மாணவர் குடிநீருக்காக அலையும் நிலை குறித்து கல்லூரி முதல்வர் வெண்ணிலாவிடம் கேட்ட பொழுது பதில் அளிக்க மறுத்து விட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon