அபாயத்தின் உச்சம்.. மழையால் இடிந்து விழுந்த சுற்றுச்சுவர்..!
நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் பந்தலூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 6 நாட்களாக பெய்த மழையால் நிலா கோட்டையில் ஒரு சில வீடுகளின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.
ஒரு சில வீடுகளில் மேற்கூறையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் மழை தொடர்ந்ததால் வீடுகள் இடிந்து விழக் கூடும் என்றும் அவர்கள் அச்சத்துடன் கூறுகின்றனர். இதனிடையே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






