ஒரு குடும்பத்தையே ஊரை விட்டு ஒதுக்கி வைத்த சோகம்..!
திருப்போரூர் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றுபவர் தன்னையும் தன் குடும்பத்தையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
களத்தூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரனுக்கும் அவரது உறவினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது. இன்றைய கிராமத்தை சேர்ந்த மகேந்திரன் கருணாநிதி உள்ளிட்ட ஐந்து நபர்கள் கிராம மக்களை ஒன்று திரட்டி கட்டப்பஞ்சாயத்து பேசியதாகவும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விடுத்து ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகவும் ராஜேந்திரன் மனைவி குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் பஞ்சாயத்து காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரும் அவரது குடும்பத்தினரும் வலியுறுத்தியுள்ளனர்.






