--- --:--:-- --

திருமணம் செய்ய பெண் வேண்டும்.. ஆட்சியரிடம் மனு அளித்த இளைஞர்..!

6

கர்நாடக மாநிலத்தில் இளைஞர் ஒருவர் திருமணத்திற்கு பெண் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சம்பவம் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.

 

இதில் காவல்துறை, வருவாய் துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்று இருந்தனர். அப்பொழுது ஆட்சியரிடம் மனு அளித்த இளைஞர் ஒருவர் தனது மனு குறித்து மைக்கில் பேசினார்.

 

அப்பொழுது திருமணத்திற்கு பெண் தேவை என்றும் அந்தப் பெண் படித்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் வசதியான குடும்பமாக இருக்க தேவையில்லை எனவும் தனது நிலைப்பாட்டை வெளிபடுத்தினார். இதை கேட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் சிரிக்க தொடங்கினர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon