தாயின் 2வது திருமணம்..சிறுவனுக்கு நடந்த கொடூரம்..!
புதுக்கோட்டையில் வீட்டில் அடித்து துன்புறுத்தியதால் வீட்டை விட்டு வெளியே 10ம் வகுப்பு படிக்கும் சிறுவனை சைல்டு லைன் அமைப்பினர் காப்பகத்திற்கு அழைத்து சென்றனர். புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ராதிகாவுக்கு இரண்டே மகன்கள் உள்ளனர்.
இவரது கணவர் ராஜூ மகாலிங்கம் நான்கு ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில் ராதிகாவுக்கு அதே பகுதியை சேர்ந்த அப்பு என்பவரிடம் தொடர்பு ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ராதிகாவின் இரண்டு மகன்களையும் அப்பு அடித்து துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது. இதனை தாங்க முடியாமல் பத்தாம் வகுப்பு படிக்கும் இரண்டாவது மகன் கீர்த்திவாசன் நேற்று இரவு வீட்டை விட்டு வெளியேறி தனியாக நடந்து சென்றுள்ளார். அதை பார்த்த அந்த பகுதி மக்கள் சிறுவனை மீட்டு விசாரணை நடத்தினர்.
அப்பொழுது தனது தாயும் தற்போதைய கணவரும், தன்னை அடித்ததால் ஏற்பட்ட காயங்களை காட்டியுள்ளான். இதனால் அதிர்ந்து போன மக்கள் உடனே சைல்டு லைன் அமைப்புக்கு தகவல் தெரிவித்தனர்.
சைல்டு லைன் கண்காணிப்பாளர் சிறுவன் கீர்த்திவாசனை அழைத்து விசாரணை நடத்தினார். பின்னர் சிறுவன் நிலையை புரிந்து கொண்ட அவர் கீர்த்தி வாசனை குழந்தைகள் காப்பகத்திற்கு அழைத்து சென்றார். மேலும் கீர்த்தி வாசனின் பெற்றோர் நேரில் ஆஜராகும்படி சைல்டு லைன் கண்காணிப்பாளர் லீனா உத்தரவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





