லாரியின் பாரம் தாங்காமல் இடிந்து விழுந்து நொறுங்கிய பாலம்..!
தஞ்சையில் லாரியின் பாரம் தாங்காமல் பாலம் இடிந்து உள்வாங்கியதால் விவசாயிகள் சிரமம் அடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் மன்னன்பேட்டையில் உள்ள பாசன வாய்க்கால் அருகே பாலம் அமைந்துள்ளது.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த பாலத்தை சுற்றி 300க்கும் மேற்பட்ட ஏக்கரில் விளைநிலங்கள் அமைந்துள்ளன. நடவு இயந்திரம், அறுவடை இயந்திரம், ட்ராக்டர் வாகனங்களை கொண்டு செல்ல இந்த பாலத்தையும் விவசாயிகள் நம்பியுள்ளனர்.
இந்த நிலையில் லோடு ஏற்றிக்கொண்டு வந்த லாரி பாரம் தாங்காமல் வந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து புதிய பாலம் போட்டு தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





