--- --:--:-- --

உதவிக்கு ஆளில்லாத முதியவரை மருத்துவமனைக்கு வெளியே விட்ட ஊழியர்கள்..!

4

நெல்லையில் அரசு மருத்துவமனைக்கு வெளியே முதியவரை ஊழியர்கள் விட்டுச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் திருமலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். 60 வயதான இவர் உடல் நலக்குறைவு காரணமாக அந்த மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

 

இந்த நிலையில் சிகிச்சையில் இருந்தவரை கவனிக்க யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அரசு மருத்துவமனை ஊழியர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அவரை வெளியே கொண்டு வந்துவிட்டதாக தெரிகிறது.

 

இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

 

Right Menu Icon