பாட்டு கேட்கும் போது வெடித்து சிதறிய ப்ளூடூத்..!
சிவகங்கையில் முதியவர் அணிந்திருந்த ப்ளூடூத் ஹெட் போன் வெடித்து விபத்திற்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 55 வயதான பன்னீர்செல்வம் என்பவர் தனது காதில் ப்ளூடூத், ஹெட்போன் அணிந்து பாடல் கேட்டுக் கொண்டிருப்பதாக தெரிகிறது.
அப்பொழுது அவர் அணிந்திருந்த ப்ளூடூத், ஹெட்போன் எதிர்பாராதவிதமாக வெடித்தது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பன்னீர்செல்வம் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டார். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





