--- --:--:-- --

தூத்துக்குடியில் கேஸ் சிலிண்டர் வெடித்து தீக்கிரையான வீடு..!

3

சாத்தான்குளம் அருகே கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டில் இருந்த மின்சார பொருட்கள் அனைத்தும் கருகின. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பெருமாள் நகர் பகுதியில் சேர்ந்தவர் தருமராஜ்.

 

இவர் குடும்பத்துடன் வெளியே சென்றிருந்த பொழுது அவரது வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அக்கம் பக்கத்தினர் அணைக்க முயன்றும் வீடு முழுவதும் பரவி வீட்டில் இருந்த டிவி, பிரிட்ஜ், கிரைண்டர் ஆகியவை கருகின.

 

பீரோவில் வைத்திருந்த 50,000 ரூபாயும் கருகியது. தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து காரணமாக இந்த பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

Right Menu Icon