விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ளும் வாய்ப்பு குறைவு – இஸ்ரோ
விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்வதற்காக வாய்ப்புகள் வெகுவாக குறைந்து வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியாவில் இஸ்ரோ அனுப்பி வைத்த விக்ரம் லேண்டர் கடைசி நேரத்தில் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடன் ஆன தொடர்பை இழந்தது. இதனால் மிகுந்த ஏமாற்றம் அடைந்த இஸ்ரோ விஞ்ஞானிகளை தொடர்பு கொள்வதற்காக தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர்.
இஸ்ரோவுடன் கைகோர்க்கும் அமெரிக்காவின் நாசாவும் ஹலோ விக்ரம் என்ற குறுஞ்செய்தி அனுப்பி வைத்து தொடர்பு கொள்ள முயன்றது. மேலும் நிலவின் தென்துருவம் அருகே வந்த நாசாவின் ஆர்பிட்டர் மூலம் தொடர்பு கொள்ள முயற்சி எடுக்கப்பட்டது. முயற்சியும் பலன் அளிக்காததால் இறுதியாக நாசாவின் 60 மீட்டர் பெரிய ஆண்டனா உதவியுடன் சிக்னல்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
அதற்கும் விக்ரம் லாண்டரிடமிருந்து எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு மட்டுமே நிரவல் பகல்பொழுது இருக்கும் என்பதால் தொடர்பு கொள்வதற்கான வாய்ப்புகள் குறைந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்தன.ர் அதேசமயம் லாண்டரை தொடர்பு கொள்வதற்கான பணிகள் நடைபெறும் எனவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




