நடுவானில் திருமண சடங்கு ஒத்திகை.. இளைஞருக்கு விமான பணிப்பெண்கள் செய்த செயல்..!
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்பொழுது அந்த விமானத்தில் பயணிக்கும் ஆண் ஒருவர் தான் மணமகன் என்றும் திருமணம் செய்து கொள்ள பயணிப்பதாக சில பயணிகளிடம் தெரிவித்துள்ளார். மேலும் தனது திருமண சடங்கில் பதட்டம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனால் விமான பணி பெண்கள் நடுவானிலேயே திருமண சடங்குகள் ஒத்திகையை ஏற்பாடு செய்தனர். புதுமணப்பெண் போல் வந்த ஒரு பெண் அலங்கரிக்கப்பட்ட அந்த இளைஞர் உடன் திருமண சடங்கில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





