--- --:--:-- --

மோட்டார் வாகன உரிமையாளர்களின் கவனத்திற்கு..போக்குவரத்து ஆணையர் வெளியிட்ட அறிக்கை..!

6

மோட்டார் வாகனங்களில் உரிய அனுமதியின்றி அங்கீகரிக்கப்படாத சிலிண்டர் அல்லது எல்பிஜி மாற்றங்கள் செய்வது சட்டப்படி குற்றம் என அரசு எச்சரித்துள்ளது.

 

போக்குவரத்து ஆணையர் வெளியிட்ட அறிக்கையில் சமீபகாலமாக மோட்டார் வாகனங்கள் தானாக தீப்பற்றி எரிந்து விபத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அதைப்பற்றி ஆய்வு செய்த பொழுது அங்கீகரிக்கப்படாத சிஎன்ஜி, எல்பிஜி மாற்றங்கள் செய்வதால் தீ விபத்து ஏற்படுவது தெரிய வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உரிய ஆவணமின்றி வாகனங்களில் மாற்றம் செய்யப்படுவது மோட்டார் வாகன சட்டம் மற்றும் விதிகளின்படி குற்றமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன உரிமையாளர்கள் அனுமதி பெறாமல் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Right Menu Icon